தமிழ்நாடு தொலைதொடர்பு ஒப்பந்த ஊழியர் சங்கம் - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

சனி, 6 ஜனவரி, 2018

திருப்பூர்பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர் மாநாடுகோரிக்கை


தீக்கதிர் செய்தி
ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரப்படுத்துக
பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர் மாநாடு கோரிக்கை
திருப்பூர், டிச.31-
பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்க மாநாடு வலியுறுத்தியுள்ளது.தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் திருப்பூர் கிளைகளின் மாநாடு சனியன்று நடைபெற்றது. தேசிய கொடியை ஜி. தமிழ்செல்வி, சங்ககொடியை வி.வி மினியன் ஆகியோர் ஏற்றிவைத்தனர். இந்த மாநாட்டிற்கு கிளை தலைவர்கள் டி.சாமியப்பன், எம்.பிரபு ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட செயலாளார் டி.ரவிச்சந்திரன் துவக்க உரையாற்றினார்.
சிஐடியு மாவட்ட செயலாளர் கே.ரங்கராஜ், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சி.ராஜேந்திரன், மாவட்ட தலைவர் ஏ.முகமது ஜாபர், ஒப்பந்த தொழிலாளர் சங்க மாவட்ட துணை தலைவர் எஸ் சண்முகசுந்தரம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.இந்த மாநாட்டில் திருப்பூர் தலைமை அலுவலக கிளையின் தலைவராக செந்தில்குமார், செயலாளராக ரமேஷ், பொருளாளராக சுப்பிரமணி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும், பிச்சம்பாளையம் புதூர் அலுவலக கிளையின் தலைவராக கனகராஜ், செயலாளராக அருண் தேவசகயாம், பொருளாளராக அஜீத் குமார் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.இந்த மாநாட்டில் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். சம வேலைக்கு, சம ஊதியம் வழங்க வேண்டும். இஎஸ்ஐ, இபிஎப், போனஸ் போன்ற சட்டபூர்வமான சலுகைகளை முழுமையாக வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

வியாழன், 28 டிசம்பர், 2017

காத்திருக்கும் போராட்டம்

 பிஎஸ்என்எல் ஊழியர்கள் காத்திருக்கும் போராட்டம்
=============================================================

வெள்ளி, 10 மார்ச், 2017

ஆர்ப்பாட்டம்


படம் இதைக் கொண்டிருக்கலாம்: 15 பேர், கூட்டம் மற்றும் வெளிப்புறம்


தீக்கதிர் செய்தி
ரிலயன்ஸ் ஜியோ தனியார் நிறுவனத்துக்கு சலுகைகள்
ரத்து செய்ய வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
கோவை, மார்ச் 9-
தொலை தொடர்பு துறையில் ரிலயன்ஸ் ஜியோ தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்படும் சலுகைகளை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர்கள் கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.பிஎஸ்என்எல் பங்குகளை தனியாருக்கு விற்க முயற்சிக்கும் மத்திய அரசின் கொள்கையை உடனடியாக கைவிட வேண்டும், 4ஜி சேவை வழங்க பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு இலவசமாக அலைக்கற்றை வழங்க வேண்டும், ரிலயன்ஸ்ஜியோ தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்படும் சலுகைகளை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை பிஎஸ்என்எல் தலைமை அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பேரணியாக சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
மேலும் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த ஆர்பாட்டத்திற்கு கூட்டமைப்பின் சார்பில் கே.சந்திரசேகரன், ராபர்ட், பட்டாபிராமன் ஆகியோர் தலைமை வகித்தனர்.ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சி.ராஜேந்திரன், நிர்வாகிகள் பிரசன்னா, வேலுச்சாமி, செம்மல் அமுதம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி உறையாற்றினர். இதில் ஏராளமான பிஎஸ்என்எல் ஊழியர்கள் கலந்து கொன்டனர்.

வியாழன், 9 மார்ச், 2017

ஒப்பந்த ஊழியர்களின் குறைந்த பட்ச ஊதியம் 19.01.2017 முதல் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அந்த கெஜட் அறிவிப்பைனை இணைப்பில் காணலாம். ஒப்பந்த ஊழியர்களின் ஊதியம் மாற்றிஅமைக்கப்பட்டது.அந்த கெஜட் அறிவிப்பைனை இணைப்பில் காணலாம்.>>> Click Here <<< அதனை தமிழகம் முழுவதும் அமலாக்க வேண்டும் என தமிழ் மாநில நிர்வாகம் மாவட்ட நிர்வாகங்களுக்கு 07.03.2017 தேதியிட்ட கடித எண் ADMN(A)/C-L/Guidelines/2016-17/8 மூலம் அறிவித்துள்ளது.(  உத்தரவு பார்க்க >>CLICK HERE<<<) மாவட்ட சங்கங்கள், ஒப்பந்த ஊழியர் சங்கங்களுடன் இணைந்து இதனை முறையாக அமல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.